03.12.2025 திருக்கார்த்திகை தீப அன்னதானம் திருவண்ணாமலை

அனைவருக்கும் இனிய வணக்கம்
நமது சர்வேஸ்வரா சாரிட்டபிள் டிரஸ்ட் ஆனது 20025 ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெற்ற அன்னதானத்தில் பங்கேற்று சிறப்பித்தது. இதில் நன்கொடை வழங்கியும் அன்னதான செயல்திட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அந்த அண்ணாமலையாரின் நல்லாசி கிடைக்க வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.

அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையானுக்கு நெய்வேத்தியம் மற்றும் பூஜை ஆனது சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட அனைத்து அன்பர்களுக்கும் சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் கரங்களால் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது

இந்த 03.12.2025 அன்னதானத்தில் கலந்துகொண்ட அன்னதான குழு புகைப்படம்

காலை 6 மணிக்கு முதலாவதாக சக்கரைப்பொங்கல் அன்னதானமாக முதலில் ஒரு பெண் குழந்தைக்கு கொடுத்து சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் தொடங்கி வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *