srisarveshwara

srisarveshwara

HILL SCHOOL PROJECT (KADAMBUR)II

ஆகஸ்ட் 2026 27 ஆம் தேதி கடம்பூர் மலைப்பகுதியில் ( குஜ்ஜம்பாளையம், மாக்கம்பாளையம், பெரியசாலட்டி, அரிகியம், அனில்நத்தம், குரும்பூர்) இருக்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பவுச் பென்சில் ரப்பர் ஷார்ப்னர் ஸ்கேல் வாய்ப்பாடு நோட்டு புத்தகம் போன்ற பொருட்களும் மேலும் 6 ஆம் வகுப்பு…

HILL SCHOOL PROJECT 2026 kadambur-I

ஜூலை 2026 9 & 10 ஆம் தேதி கடம்பூர் மலைப்பகுதியில் இருக்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன அனைத்து வகுப்பிலும் முதல் 3 ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமான பரிசுகள் வழங்கப்பட்டன

31/01/2026 அன்று நமது ட்ரஸ்ட் சார்பாக பழனிக்கு பாதயாத்திரை

31/01/2026 அன்று நமது ட்ரஸ்ட் சார்பாக பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு mixed fruit salad தாராபுரம் அலங்கியதில் பகுதியில் வழங்கப்பட்டது.இதில் தினகரன் சரவணமூர்த்தி சம்பத்குமார் செந்தில்குமார் முருகேசன் ரவி சிஜு ஆகியோர் இந்த செயல் திட்டத்தை சிறப்பாக செய்திட கலந்து கொண்டனர்.

29-07-2022 அன்று ஸ்ரீ சர்வேஸ்வரா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக, டிரஸ்ட் ன் குருவும் டிரஸ்ட் ன் வழிகாட்டியும் ஆனா சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களின் திருக்கரங்களால் பர்கூர் , தேவர்மலை, மடம், ஓசூர், தாமரைக்கரை போன்ற பள்ளிகளில் அக் குழந்தைகளுக்கு தேவையான கணித உபகரண பெட்டி, ( ( ஜாமெட்ரி பாக்ஸ் )பேனா , பென்சில் போன்ற பொருள்கள் வழங்கப்பட்டது.

07.08.2024 அன்று தாளவாடி மலைப்பகுதியில் இருக்கும் கிராமப்புற பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் பென்சில் பென் நாப்கின் எரியூட்டி இயந்திரம் போன்ற பொருட்கள் ஸ்ரீ சர்வேஸ்வரா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது.

நாப்கின் எரியூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது. கல்வியின் அவசியம் பற்றி சிறிய உரை நிகழ்த்தினார் நமது குரு சுவாமி சதானந்த சரஸ்வதி, உத்தண்டி ஆஸ்ரமம் சென்னை, அவர்கள் நாப்கின் எரியூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது.

13/09/2025 ஸ்ரீ சர்வேஸ்வரா டிரஸ்ட் ஈரோடு சார்பாக பர்கூர் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களால் வழங்கப்பட்டது

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரண பொருட்கள்

03/02/2023 சர்வேஸ்வரா ட்ரஸ்ட் சார்பாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதம் பால் மற்றும் சுக்கு காபி வழங்கும் செயல்திட்டம்.

டிரஸ்ட் உறுப்பினர்கள் சேர்ந்து சுத்தமான முறையில் பாதம் பால் மற்றும் சுக்கு காபி தயாரித்து வழங்கினோம்

11/01/2026 சத்தியமங்கலம் மலைப்பகுதியான தாளவாடி சுற்றி அமைந்துள்ள குக் கிராமங்களில் வசிக்கும் பெரியோர்களுக்கு உடமைகள் வழங்குதல்.

11/01/2026 ஶ்ரீ சர்வேஷ்வரா டிரஸ்ட் ஈரோடு சார்பாக சத்தியமங்கலம் மலைப்பகுதியில் இருக்கும் தாளவாடி சுற்றி அமைந்துள்ள குக் கிராமங்களான கோடம்பள்ளிபாலப்படுகைஅல்லாபுர தொட்டிகெட்டவாடிசோழகர்தொட்டிபொதேதிகனாரேஇல் வசிக்கும் முதியோர்களுக்கு குளிர்காலத்தில் பயன்படும் விதமாக ஆண்களுக்கு பெட்ஷீட் வேஷ்டி துண்டுகளும் பெண்களுக்கு பெட்ஷீட் மற்றும் புடவை போன்ற துணிமணிகள் வழங்கினோம் இந்த செயல்திட்டத்தில் கலந்து கொண்ட டிரஸ்ட் உறுப்பினர்கள்

02/04/2023 அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் ஈரோடு திருவிழா. பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

02/04/2023 நமது சர்வேஸ்வரா ட்ரஸ்ட் சார்பாக ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றவரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.